2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

‘வாழ்க்கை வட்டி வழங்குவதல்ல’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழைத் தேட ஆலாய்ப் பறப்பவர்கள், அதற்காக எந்தவிதமான நற்செயல்களைச் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால், முறைகேடான செயல்களில் மாத்திரம் தீவிரமாக இருப்பார்கள்.

இன்று தங்களுக்கான புகழ் தேடல்களைப் பிறர் மூலம் செய்து வருகின்றனர். வாராவாரம் இவர்களது கழுத்தில் மாலை விழாவிட்டால், உறக்கமே வராது. இவர்களால் மாலை கட்டுபவர்கள்தான் நன்மையடைவார்கள். இந்த வெட்டிப் பந்தாவால் முழுமையான சந்தோசம் கிடைத்து விடுமா?

தானாகத் தேடிவராத புகழை, வலிந்து கவர எண்ணுவதே பிறர் இகழ்ச்சிக்குரியது அல்லவா?

வாழ்க்கையில் கிடைக்க வேண்டியன எல்லாமே கிடைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கான கால அவகாசத்தை விரும்புவதில்லை.

எமக்கான பங்கு கிடைக்க, நாம் உலகத்துக்கு என்ன வழங்குகின்றோம் என்பதைப் பொறுத்தது. இதுகூட வங்கி முறைமை போன்றதுதான். வங்கியில் பணத்தை வைப்புச் செய்யாமல், அதன்முலம் வரும் வட்டிப் பணத்தை எப்படி எடுக்க முடியும்?

ஆனால், வாழ்க்கை வட்டி வழங்குவதல்ல; புண்ணியங்களைச் செய்வதாகும். அது வழங்கும் வழங்கல்கள், பணம், புகழை விட மெலானது

வாழ்வியல் தரிசனம் 19/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X