2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

பெலிவுல் ஓயாவை நோக்கி ஒரு பயணம்

Editorial   / 2019 ஜூலை 11 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலிவுல் ஓயா இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும் பெலிவுல்லோயா ஆகும்.

இப்பகுதியினூடாக பாயும் பெலிவுல் ஆற்றின் சிங்கள மொழிப் பெயரிலிருந்து தோன்றியப் பெயரே இந்த நகருக்கும் இடப்பட்டுள்ளது.

இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளதுடன், இந்நகரம் சுற்றுலாப் பயணிகளில் கவனத்தைப் பெற்ற இடங்களில் ஒன்றாவதுடன், ஓட்டன் சமவெளியின் உலக முடிவு என அழைக்கப்படும் 1,000 அடி செங்குத்துச் சாய்வின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு மிகவும் பிரசித்துப்பெற்று விளங்கும் பெலிவுல் ஓயாவவை காண, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைத்தருகின்றனர்.

இலங்கையில் மிகவும் பிரபல்மானதும் இயற்கை அழகுடனும் திகழும் பல சுற்றுலாத் தளங்களின் வரிசையில் பெலிவுல் ஓயாவுக்கும் பிரதான இடமுண்டு.

இதன் வனப்பு பார்ப்பவர்களை வெகு சீக்கிரமாகவே கவர்வதுடன், அருகிலிருக்கும் வனாந்தரங்களும் பெலிவுல் ஓயாவின் அழகை மேலும் மெருகூட்டி காட்டுவது சிறப்பம்சமாகும்.

அத்துடன் பெலிவுல் ஓயாவுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கென விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் என்பவையும் இங்கு ஏராளமாக காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .