2023 ஜூன் 07, புதன்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் காதருக்கு கலாம் விருது

Editorial   / 2019 மார்ச் 10 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர், ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் ஏ.ஜே.பி.அப்துல் கலாம் ஞாபகார்த்த உன்னத சேவைக்கான விருது (SERVICE EXCELLENCE AWARD) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

 

லங்கா சாதனையாளர் மன்றம் விஸ்வம் கெம்பஸூடன் இணைந்து நடத்திய “டொக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மான்புறும் சாதனையாளர் விருது விழா – 2019”, மார்ச் 1ஆம் திகதி கொழும்பு - 07, ஹட்டன் பிளேஸ், லைட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

லங்கா சாதனையாளர் மன்றத்தின் தலைவரும், விஸ்வம் பல்கலைக்கழகத்தின் தவிசாளருமான பேராசிரியர், கலாநிதி ஏ.டிக்ஸ்டர் பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக் கலந்துகொண்ட இந்தியப் பேராசிரியர் பத்மஸ்ரீ டொக்டர் விஜயகுமார் எஸ்.சாஹ், சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட பேராசிரியர் டொக்டர் எம்.எச்.றிஸ்வி ஷரீப், பேராசிரியர் டொக்டர்   எஸ்.எல்.றியாஸ், பேராசிரியர் டொக்டர் லக்ஸ்மன் மதுரசிங்க, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் ஆகியோர், கலாபூஷணம் காதருக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ், விருது வழங்கிக் கௌரவித்தனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .