2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

கண்டி பேராதெனிய தாவரவியல் பூங்கா

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவில் உள்ள மிக அழகிய தாவரவியல் பூங்காக்களில், இலங்கையின் மத்திய மலை நாடான கண்டியில் அமையப்பெற்றுள்ள, பேராதெனிய தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும்.

147 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட விசாலமான தாவரவியல் பூங்கா என்பதுடன், பலவகையான ஓர்க்கிட் மலர்களையும், 4000 க்கும் மேற்பட்ட தாவரயினங்களையும், குறிப்பாக ஓர்க்கிட், மருத்துவச் செடிகள் மற்றும் பாம் மரங்களையும் இங்கு அதிகளவில் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாவரவியல் பூங்காவானது, கொழும்பு – கொம்பனித்தெரு மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தாவரங்களை நட்டு பராமரிக்கப்பட்டதையடுத்து, 1843 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

மேலும் 1912 ஆம் ஆண்டில் இப்பூங்காவானது, விவசாயத்துறை திணைக்களத்தின் கீழ் மீள நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழகிய விசாலமானத் தாவரவியல் பூங்காவினைப் பார்வையிட வரும் மக்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 2 மில்லியனாக உள்ளது எனக் கணக்கெடுப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணைக் கவரும் பல வர்ணங்களைக் கொண்ட ஓர்க்கிட் மலர்களுக்கு பெயர்ப்போன, ​பேராதெனிய தாவரவியல் பூங்காவினைக் கண்டு இரசிக்க வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இங்கு ​​​அகரித்த வண்ணமே உள்ளது. இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களில் “பேராதெனிய தாவரவியல் பூங்கா” வும் ஒன்றாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .