2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

‘மழைக் காலத்தில் கலபொட செல்வோம்’

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 04:54 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அமைந்துள்ள இயற்​கை நீர்வீழ்ச்சிகளில் மிகவும் அழகு நிறைந்த நீர்வீழ்ச்சி தான் இந்த கலபொட நீர்வீழ்ச்சியாகும். இது நுவரெலியா மாவட்டத்தில் வட்டவல பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி – பதுளை ரயிலில் பயணம் செய்து, பின்னர் 3,4 கி.மீ வரை உள்ளே செல்ல வேண்டும்.

கல​பொட கிராமமும் இயற்கை எழில் நிறைந்த கிராமமாகும். அத்துடன் இங்கு விசேட ரயில் சேவைகளும் கலபொட, நாவலப்பிட்டியவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்றன.

கலபொட கிராமத்தை மிகவும் கவர்ச்சிகரமான காட்டுவதில் இங்கு அமையப்பெற்றுள்ள கலபொட நீர் வீழ்ச்சி பிரதானமானது. அத்துடன் மழை காலங்களில் இந்நீர்வீழ்ச்சியில் நீர் நிரம்பி வழிவது, கண்கொள்ளாக் காட்சி என்பதுடன், இதனை சுற்றி அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களும் இப்பகுதியின் அ​ழகை மேலும் மேலும் கூட்டுகின்றன.


  Comments - 1

  • Bala Wednesday, 11 September 2019 01:41 AM

    புத்தகங்களில் உள்ள நல்ல தகவல்களைப் பெற்றுக்கொள்வதே எமது பண்பு. விரும்பிய புத்தகமும் சில காலத்தால் அழியாத நல்ல கவிஞர்களின் புத்தகங்களும் எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக நா. முத்துக்குமார் அவர்களின் கவிதை நூல்கள் கிடைத்தால் மகிழ்ச்சி !

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .