2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

பறவை காவடி ஊர்வலம்

Janu   / 2023 மே 29 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்திற்கு உட்பட்ட இராகலை நகரில் 60 அடி உயர கதிர்வேலாயுத சுவாமி சிலை கொண்டு  நகரில் நடு நாயனமாக சிறப்பாக திகழும்  இராகலை கதிர்வேலாயுத சுவாமி ஆலய முதலாவது மஹோற்சவ பெருவிழா (24.05.2023) அன்று  ஆலய மணிகோபுர கும்பாபிஷேக நிகழ்வுடன் கொடியேற்றப்பட்டு ஆரம்பமானது.

தொடர்ந்து (13) நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறவுள்ள இந்த மஹோற்சவ பெருவிழாவின் மூன்றாம் நாள் உபய விழாவாக இராகலை நகர் ஐக்கிய சாரதிகள்  சங்கம், மற்றும் வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் பறவைக்காவடி ஊர்வலத்தை நடத்தினர்.

இதன் போது இராகலை சென் லெணாட்ஸ் நகரில் இருந்து  பறவை காவடிகள் மாலை 04 மணிக்கு ஆரம்பமாகி  மேல தாளத்துடன் ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்து விசேட பூசைகள் இடம்பெற்றது.

ஆ.ரமேஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .