Princiya Dixci / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீடு என்றால் அதனைப் பெரிய அளவில் மற்றவர் பொறாமைப்படும் விதத்தில் அமைத்திட வேண்டும் எனத் தனவந்தர்கள் கருதி, அவ்வண்ணமே செயற்பட்டும் வருகின்றனர்.
இதே வழிமுறைகளையே நடுத்தர வர்க்கத்தினரும் கையாண்டு, இறுதியில் படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமானது அல்ல. கண்டபடி தனியார், அரசாங்க வங்கிகளில் மட்டுமன்றி, தனிநபர்களிடமும் வட்டிக்குப் பணம் எடுக்கின்றனர். இதன் பொருட்டு நிலம், நகை எனப் பலவாறான சொத்துகளை ஈடு வைக்கின்றனர்.
அடக்கமான வீடே அழகு. பொருத்தமில்லாத அகன்ற, உயர்ந்த வீடுகளைக் கட்டுவதில் ஏது பெருமை? அவைகளைப் பராமரிப்பது சுலபமான ஒன்றா?
மேலும், இத்தகைய இல்லங்களுக்குள் வைக்கப்படும் தளபாடங்களின் தொகைகளோ ரொம்பவும் அதிகம்; பணமும் மிகை.
பணத்தை வீணாக்கி, வீம்புக்கு மனை அமைப்பது நன்று அல்ல; உள்ளதை எல்லாம் வீடு கட்டச் செலவு செய்தால், எதிர்காலத்துக்கான சேமிப்புக் கிடைக்குமா? வாழ்வை அழகுபடுத்த டாம்பீகம் எதற்கு?
வாழ்வியல் தரிசனம் 27/12/2016
பருத்தியூர் பால – வயிரவநாதன்
55 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
59 minute ago