2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் மலர் கண்காட்சி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.தியாகு


நுவரெலியா வசந்த காலத்தையொட்டி வருடம் தோறும் நடைபெறும் மலர் கண்காட்சி இவ்வருடமும் இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

இதற்கான நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மலர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இதற்கான நிகழ்வில் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே, பிரதி முதல்வர் திஸ்ஸ செனவிரத்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நாளை வெள்ளிக்கிழமைவரை நடைபெறவுள்ள இந்த மலர் கண்காட்சியில் 56 வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த மலர் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு  முதற்பெண்மனி சிரந்தி ராஜபக்ஷ பரிசில்களை வழங்கிவைக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X