2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கின் அழகை கண்டுகளிக்க உதவும் 'ஈஸ்ட் லகூன்' நட்சத்திர ஹோட்டல்

Menaka Mookandi   / 2013 ஜூன் 17 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக மட்டக்களப்பு சின்ன உப்போடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடனான 'ஈஸ்ட் லகூன்' எனும் நட்சத்திர ஹோட்டல் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் பெற்றி இன் பிறைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளருமான சமூக சேவையாளர் எம்.செல்வராஜாவின் முயற்சியினால் தேசிய முதலீட்டுச்சபை மற்றும் சுற்றுலா சபை என்பவற்றின் அனுமதியுடன் சகல வசதிகளுடனும் இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலில் தேனிலவு அறை மற்றும் சொகுசு அறை, உல்லாச அறை, மேம்படுத்தப்பட்ட அறை, குடும் அறை என பல்வேறு வகைகளைக்கொண்ட 45 அறைகள் உள்ளன.

நீச்சல் தடாகம், மற்றும் திருமண மண்டபம், என்பவற்றுடன் புதிய தொழிநுட்பங்களுடனான உள்ளக கூட்ட மண்டம் என்பவைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பின் இயற்கை அழகைக் கொண்ட வாவியின் ஓரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்ந ஹோட்டலின் வெளி மற்றும் சுற்றுப்புறச் சூழல் இயற்கை அழகும் பசுமை நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு வரலாற்றில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலை திறந்து வைக்கும் வைபவத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0

  • anantha Tuesday, 18 June 2013 04:01 AM

    Super... nan vacation vanththa enththa hotle la than thanka vandum.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X