2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

செயற்கை மாட்டிறைச்சி பர்கர் தயார்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோதனைக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சியைக் கொண்டு செய்யப்படும் உலகின் முதல் மாட்டிறைச்சி பர்கர் இன்று, லண்டனில் சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

பசுவின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி டச் விஞ்ஞானிகளால் இந்த செயற்கை பர்கர் உருவாக்கப்பட்டது. 20,000க்கும் மேற்பட்ட சிறிய நூலிழை இறைச்சி சோதனைக் குழாய்களில் உருவாக்கப்பட்டு இந்த பர்கர் தயாரிக்கப்பட்டுள்ளது.

புரதச்சத்துக்கு உலக அளவில் இருக்கும் தேவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற செயற்கை இறைச்சிப் பொருட்கள் எதிர்காலத்தில் ஒரு தீர்வாகலாம் என்று இது குறித்து ஆராய்ச்சி செய்த மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகக் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இது உணவு உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வல்லது என்றும் அப்பல்கலைக்கழக குழு அறிவித்துள்ளது. ஆனால் இந்த 150 கிராம் செயற்கை பர்கரின் விலை என்ன தெரியுமா? 3 இலட்சம் டொலர்களாகும்.

  Comments - 0

  • doxit Wednesday, 14 August 2013 11:10 AM

    தேவை இல்லை, இலங்கையில் இருந்து வாங்கலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X