2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

பென்குயின் சாதனை

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 325 பெண்கள்  பென்குயின் வேடமணிந்து புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளனர்.

லண்டன், கெனர வார்ப் நகரில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நல்வாழ்விற்கான நிதியை திரட்டுவதற்காக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த சாதனையில் பங்குகொண்ட பெண்கள் பென்குயினை போன்று கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த அதேவேளை, மஞ்சள் நிறத்திலான பாதணிகளையும், கருப்பும் மஞ்சளும் கலந்த தலைக்கவசத்தையும் அணிந்திருந்தனர்.

பார்ப்பதற்கு அசல் பென்குயினை போன்று அவர்கள் காணப்பட்டமை மிகவும் பாராட்டத்தக்கதாக காணப்பட்டது.

இவர்களது சாதனை அடங்கிய வீடியோவானது இணையத்தளத்தில் வெளியாகி பலரது கவணத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .