2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

நீருக்கு அடியில் திருமணம்: கின்னஸ் சாதனை படைத்த தம்பதி

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீருக்கு அடியில் திருமணம் செய்து புதிய தம்பதியொன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சுழியோடி பயிற்சியாளர்களான ஜப்பானை சேர்ந்த ஹிரோயுகி யொஷிதா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சான்ட்ரா ஸ்மித்; ஆகியோரே இவ்வாறு நீருக்கு அடியில் திருமணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.

இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்துள்ளத. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ளனர். தமது திருமணத்தை நீருக்கு அடியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக 6 மாதங்கள் நீருக்கு அடியில் கடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். 

கடும் பயிற்சிக்கு பிறகு தாய்லாந்தின் டிராங் பகுதியில் உள்ள சாங் ஹாங் ஆற்றின் ஆழத்தில் உள்ள குகையில் திருமணம் செய்துகொண்டனர்.
நிலப்பரப்பில் இருந்து 130 மீட்டர் ஆழத்தில் உள்ள இடத்தில் திருமணம் செய்ததற்காக ஹிரோயுகி மற்றும் சான்ட்ரா தம்பதியின் பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

குகையில் மூச்சுவிடவும் சிரமமான இடத்திலும் ஹிரோயுகி மோதிரம் மாற்றிய பிறகு தனது மனைவி சான்ட்ராவுக்கு முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X