2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

Flag & Whistle

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


தனிமையை விரும்பாத மனிதர்களே இல்லை எனலாம். தினமும் பல்லாயிரம் வேலைகளை தலையில் சுமந்திருக்கும் ஒருவருக்கு தனிமையில், இல்லையேல் நண்பர்களுடன் நிம்மதியாக பொழுதைக் கழிப்பதற்கு இடமொன்று கிடைத்தால் அவரது சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.

இப்படி சின்னச் சின்ன சந்தோஷங்களை தரக்கூடிய இடங்கள் பல இடங்களிலும் இருக்கின்றன. தலைநகர் கொழும்பிலும் இப்படியான, அழகான, அமைதியான ஓர் இடம் இருக்கிறது. அதுதான் பிளக் அன்ட் விஸ்டில் (Flag & Whistle).

இல. 256, ஸ்ரீமத் ராமநாயக்க மாவத்தை, கொழும்பு-15 என்னும் முகவரியில் அமைந்துள்ள 'செற் மில்' கட்டடத்தின் 5ஆவது மாடியில் இந்த இடம் அமைந்திருக்கிறது. அதாவது, கொழும்பு கொச்சிக்கடையிலிருந்து மட்டக்குளி செல்கின்ற பாதையில் துறைமுகத்தின் எதிர்ப்பக்கமாக இந்த கட்டடம் அமைந்திருக்கிறது.

பிளக் அன்ட் விஸ்டில் றெஸ்ரௌரன்டின் அழகு தனிமையானது. மிகவும் உயரமான கட்டடத்தில் இந்த றெஸ்ரௌரன்ட் அமைந்திருப்பதால், இங்கிருந்து துறைமுகத்தின் அழகினை ரசிக்க முடியும். அதேபோல் மாலை வேளையில் சூரியன் மறைகின்ற காட்சியையும் அழகாக அனுபவிக்க முடியும்.

குடும்பத்தினருடன் சென்று மாலைப் பொழுதினைக் களிப்பதற்கு மிகவும் பொருத்தமான இடம். அனைத்துவிதமான உணவு வகைகளும் இங்கு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் குடிபான வகைகளும் இருக்கின்றன. சிறிய குடும்ப வைபவங்களை நடாத்துவதற்கும் இந்த இடம் சாலச்சிறந்தது. சுமார் 200 தொடக்கம் 250 பேர்வரை இந்த றெஸ்ரௌரண்டில் உணவு உட்கொள்ளக்கூடிய வசதி இருக்கின்றமை சிறப்பானதாகும்.

சுpறிய விருந்துபசாரங்கள், பிறந்தநாள் வைபவங்கள், காரியாலய ஒன்றுகூடல்கள் என சிறிய விருந்துபசாரங்களுக்கு தலைநகரில் சிறந்த இடமாக பிளக் அன்ட் விஸ்டில் விளங்குகின்றமை சிறப்பானதாகும். உங்களுடைய தேவைக்கேற்ப விலைப்பட்டியலையும் நீங்கள் இங்கே பெறமுடியும். சுpறிய விலைகளிலிருந்து அதியுயர் ரக உணவுவகைகள் வரை இங்கு கிடைக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

நீங்களும் இந்த இடத்திற்கு செல்லவேண்டுமென்றாலோ அல்லது சிறிய விருந்துபசாரங்களை நடத்துவதுபற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றாலோ 0094 11 2485500, 0094 777 309272 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொள்ளுங்கள். (படங்கள் : வருண வன்னியாராச்சி)
  Comments - 0

  • Mutabi3 Sunday, 16 December 2012 05:12 PM

    ஹலால் சான்றிதழ் உண்டெனில் அறியத்தரவும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X