2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்டி

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

றம்ஸி குத்தூஸ்

சன்குயிக் '2019 ஆம் ஆண்டுக்கான தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன் ஷிப்' போட்டியை நடாத்துவதற்காக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மீண்டும் ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதன் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் செயலாளர் நாலக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

 சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்டிகள் நீர்கொழும்பு பொது கடற்கரைப்  பூங்காவில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20,21,மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் செயலாளர் நாலக தெரிவிக்கையில்:இப்போட்டிகள் ஆண்,பெண்குழுக்களில் திறந்த அடிப்படையிலான 20 மற்றும்25 வயதுக்கு கீழ்பட்டபோட்டிகள் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெறும். இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு சன்குயிக் வெகுமதிகளான பணப்பரிசில்களும் வழங்கப்படும்.   

சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெறும் சமகாலத்தில், ஒருநாள் மாலை நேரத்தில் கடற்கரை யோர கோண்டாட்ட நிகழ்வொன்றும்  நடைபெறவுள்ளது. கரப்பந்தாட்டபோட்டியில் இணைந்து கொள்ளுகின்ற ஒவ்வொருவரும் மகிழும் பொருட்டு களிப்புட்டல் செயற்பாடுகள் ,இசை மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் உள்ளடக்கியிருக்கும்.மேலும் இது தொடர்பான தகவல்களை asnalaka@gmail.com  இணையத்தில் பெற்றுக் கொள்ளமுடியும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .