2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

உறுதிமொழிகளை தலிபான்கள் காப்பாற்றுவார்களா?

Editorial   / 2021 செப்டெம்பர் 08 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.

அந்த சட்டங்களில் இஸ்லாத்துக்கு எதிரான விடயங்களும் தேசிய நலனுக்கு விரோதமான தகவல்களும் வெளியிடப்படக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சுதந்திர ஆப்கன் செய்தி நிறுவனங்கள் இன்னமும் பெண் பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு உத்தரவுகளை எதிர்நோகியுள்ளன.

கடந்த காலங்களில் தலிபான் போராளிகள் பல பத்திரிக்கையாளர்களை சுடடுக்கொன்ற நிலையில் தற்பொழுது பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து இருப்பதாகக் கூறுகின்றனர்.

தலிபான்களின் செயல்பாட்டை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்களை அவர்கள் நடத்தும் முறையானது ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும். அத்துடன் பெண்கள் மீதான அவர்களின் கொள்கைகளை வெளிக்காட்டுவதாகவும் இருக்கும்.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான்  அதிகாரத்தை கைப்பற்றியிருந்த  தலிபான்கள் இஸ்லாத்தின் கடுமையான சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தினர். அதனால் பெண்கள் பாடசாலைகளிலிருந்தும் பொது வாழ்வில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டனர். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். தலிபான்கள் பலமிழந்த காலம் முதல் ஆப்கானிஸ்தானில் ஊடகங்களின் பெருக்கம் ஏற்பட்டது.

ஆழமான பழைமைவாத சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து பெண்கள் விடுபட்டனர்.  அதன்பின்னர் பெண்கள் சமூக முன்னேற்றங்களுக்கு முகம் கொடுத்தனர்.

எனினும் தற்பொழுது நல்லதொரு ஆட்சியை வழங்குவதாக உறுதி அளித்துள்ள நிலையில் அதன் முதலாவது அறிகுறியாக தலிபான்கள் நற்பெயரை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது.

தலிபான்களின் அதிகாரி ஓருவர் எதிர்பாராதவிதமாக ஒரு தனியாருக்கு சொந்தமான டோலோ நியூஸ் செய்தி நிறுவன ஸ்டூடியோவுக்குள் நுழைந்தார். தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 ஸ்டூடியோவுக்குள் சென்ற தலிபான் அதிகாரி அங்கு இருந்த ஒரு பெண் பத்திரிகையாளருக்கு  முன்னால் ஒரு நேர்முக பேட்டிக்காக அமர்ந்தார். பெஹிஸ்டா ஆர்கன்ட் என்னும் அந்த 22 வயது பெண் ஊடகவியலாளர் இதுபற்றி கூறுகையில் தலிபான் அதிகாரி உள்ளே நுழைவதைக் கண்டதும் தனக்கு மிகவும் பதற்றமாக இருந்ததாகவும் ஆனால் அவருடைய நடத்தையும் கேள்விகளுக்கு பதிலளித்த பாங்கும் அவர்மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதாக இருந்ததாகவும் கூறினார்.

எனினும் அந்தப் பெண் பத்திரிகையாளர் இந்த நேர்முக பேட்டிக்கு பின்னர் வாய்ப்புகளை பெறுவதற்கு விருப்பமற்ற நிலையில் அதாவது தலிபான்களின் வாக்குறுதிகளை நம்ப முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் தற்பொழுது தற்காலிகமாக கட்டாரில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான முகாமில் தங்கி இருக்கிறார்.

அவர் அங்கு நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் இருக்கிறார். அவர்களில் பலர் தங்களுடைய ஊடக களத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள். இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய இலட்சம் ஆப்கானியர்களில்  ஒரு பகுதியினராவர்.

 இருப்பினும் அந்தப் பெண் பத்திரிகையாளரின் தலிபான் அதிகாரியுடனான பேட்டி குறிப்பிடத்தக்க ஒன்று. தலிபான்கள் முதல் முறை அதிகாரத்தைக் கைப்பற்றி இருந்தபோது பெண்கள் தங்களை தலையிலிருந்து கால் பெருவிரல் வரை முற்றாக மூட வேண்டியிருந்தது.

 விபசாரம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் பொது இடங்களில் வைத்து கல்லெறிந்து கொல்லப்பட்டனர். ஆனால் இம்முறை பல மாகாணங்களில் பெண்கள் பாடசாலைக்கு செல்லும் வீடியோ காட்சியை தலிபான்கள்  பகிர்ந்துகொண்டனர்.

அத்துடன் அவர்கள் காபூலைக் கைப்பற்றியபின்னர் செய்தியாளர் மாநாடுகளையும் நடத்தி உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளனர்.

இதேவேளை டோலோ செய்தி நிறுவனத்தை நடத்தும்  மோபி குரூப்பின் தலைவர் ஸாத் மோஹ்ஸேனி  இதுபற்றி கூறுகையில் தலிபான்கள் ஊடகங்களுடன் பொறுமையாக நடந்துகொள்ள விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்குப் புரிகிறது உள்ளங்களையும் மனதையும் வெல்வதே அரசியலை நிறுவுவதற்கு அவசியம் என்பது. இப்படி  நம்புவதாக அவர் கூறினார்.

அவர்களுக்கு ஊடகங்கள் மிகவும் முக்கியம். இன்னும் ஓரிரு மாதங்களில் ஊடகங்களுக்கு  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அவர் டுபாயில் உள்ள மோபி குரூப் அலுவலகத்தில் வைத்துக் கூறினார்.

அமெரிக்காவும் அதன் அணிகளும் ஆப்கானிஸ்தானில் நிலையான ஒரு ஜனநாயகத்தை உருவாக்குவதில் தோல்வி அடைந்தபோதிலும் ஒரு தெளிவான ஊடகத் துறையை உருவாக்குவதில் அவர்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழுவுக்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் கூறினார்

அமெரிக்க அரசாங்கம் ஜனநாயகத்தை நிலைநாட்டும் திட்டத்துக்கு பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ளதாக  சிபிஜே இணையதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோலோ வானொலி நிலையத்தை நிறுவுவதற்கு அமெரிக்கா ஆரம்பத்தில் நிதி உதவி செய்தது. இந்த நிலையம் 2003 இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் தொலைக்காட்சி நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டது. பாஸ்தோ மற்றும் டாரி மொழி ஒளிபரப்பாளர் 500 பேரை இங்கு நியமித்திருக்கிறார். இதுவே ஆப்கானிஸ்தானில் அதிகமானோர் பார்க்கும் தனியார் வலைத்தளம் ஆகும்.

ஆப்கானிஸ்தானின் மாநில ஒலிபரப்பு நிலையம் ஆர்டிஏ அதன் பெண் ஊடகவியலாளர்களை அடுத்த அறிவித்தல் வரை நிறுத்தி வைத்துள்ளது. சுதந்திர பெண்களால் நடத்தப்படும் ஸான் டிவி புதிய நிகழ்ச்சி அறிவித்தல்கள் காட்டுவதை நிறுத்தி வைத்துள்ளது.

டோலோ வலைத்தளத்தில் காலை உணவு நிகழ்ச்சியில் ஒரு பெண் தொகுப்பாளர்,  பெண் செய்தி தொகுப்பாளர் மற்றும் பல பெண் நிருபர்கள் உள்ளனர். தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பத்திரிகையாளர்களை தாக்குவதும் அச்சுறுத்துவதாகவும் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அறியப்பட்ட ஒரு விடயமானது தலிபான் போராளிகள் ஓர் ஊடகவியலாளரைத் தேடி வீடுவீடாக சென்றதாகவும் அவர்கள் அந்த ஊடகவியலாளரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொன்றும், இன்னொருவரை படுகாயமடையச்செய்ததாகவும் ஜெர்மன் ஒலிபரப்பாளர் டியூட்ஸ்ஸே வெல்லே கூறினார்.

ஆப்கானிஸ்தானின் நீண்டகால பத்திரிகையாளரான பிலால் சர்வாரி கூறுகையில்

மக்களுக்கு தேவையாக இருப்பதால் ஆப்கானிய பத்திரிகை துறை செயல்பட வேண்டும் என்று கூறினார்.  இவருடைய ஆக்கங்கள் பிபிசியில் ஒளிபரப்பாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரும் தம் குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறிவிட்ட போதிலும் ஒரு பத்திரிகையாளர் பிரஜைகள் எப்போதும் மிகவும் அதிகாரம் பெற்றவர்கள் என்று கூறினார். எங்களால் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு போகமுடியாவிட்டால் நாங்கள் ஆப்கானிஸ்தானை கைவிட்டுவிட்டதாக அர்த்தமல்ல. நாங்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்து ஆப்கானிஸ்தானிஸ்கானுக்காக செயல்படுவோம் என்று கூறினார்.

இதேவேளை ஆப்கானிஸ்தானில் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும் பாகிஸ்தானிலிருந்து பத்திரிக்கையாளர்கள் வரலாம் என்றும் காபூலில் உள்ள பத்திரிகை நிலையங்கள் தொடர்ந்து இயங்தலாமென்றும் தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால் செய்திகள் அறிக்கைகள் என்பன இஸ்லாமிய தத்துவங்களுக்கு முரணாக இருக்கக்கூடாது என்றும் தேசிய நலன்களுக்கு சவால் விடக் கூடாது என்றும் அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இத்தகைய தெளிவற்ற கட்டுப்பாடுகள் மத்திய கிழக்கு மற்றும் ஆசியா முழுவதும் உள்ள சர்வாதிகார மாநிலங்களுக்கு பொதுவானவை. அங்கு அவை ஊடகவியலாளர்களை அமைதிப்படுத்தவும் அவர்கள் மீது வழக்கு தொடரவும் பயன்படுத்தப்பட்டன.

இவை செயல்படுவதற்கு உள்ளூர் ஊடகங்கள் தமக்குத்தாமே கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு தணிக்கையை செய்து கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் நீண்டகாலமாக பத்திரிக்கையாளர்களுக்கு அபாயகரமானதாக இருந்தது.

ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டுமுதல் 53 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களில் 33 பேர் 2018 ஆம் ஆண்டுக்குப்பின் கொல்லப்பட்டவர்கள்.

புலிட்ஸர் விருது பெற்ற பிபிசி புகைப்படப்பிடிப்பாளர்; தலிபான்களுக்கும் ஆப்கான் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின்போது செய்தி சேகரிப்பதற்கு சென்றதற்காக ஜூலை மாதம் கொல்லப்பட்டார்.

2017ஆம் ஆண்டு காபூலில் உள்ள ஓர் உணவகத்தில்  உணவருந்திக் கொண்டிருந்த 9 பேர் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒரு பிரான்ஸ் பத்திரிக்கையாளர் அவருடைய மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும்  அடங்குவர்.

அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் அதாவது 2016 இல் ஒரு தலிபான் தற்கொலை குண்டுதாரி ஓருவர் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த  டோலோ உத்தியோகத்தர்களை குறி வைத்தார். இத்தாக்குதலில்  ஏழு பேர் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 25 பேர் காயமடைந்தனர்.

இந்த  தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். அவர்கள் அதற்கு மேற்குலகிற்கு இவர்கள் ஆயுதம் என்று காரணம் குறிப்பிட்டனர்.

எப்படி இருந்தபோதிலும் தலிபான்களின் அதிகாரம் எவ்வாறு நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் தமது உறுதிமொழிகளை பின்பற்றுகிறார்களா அல்லது எதிர்மாறாக நடக்கிறார்களா என்பது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம் என்று மோஹ்ஸேனி மேலும் கூறினார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X