2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கான எல்லேயில் சம்பியனான அரபா இல்லம்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 06 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கியாஸ் ஷாபி

கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான எல்லேயில் அரபா இல்லம் சம்பியனானது.

பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான எல்லேயின் முதலாவது போட்டியில் சபா இல்ல அணியை எதிர்த்தாடிய அரபா இல்ல அணி 5-1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் இலகுவாக நுழைந்தது.

இறுதிப் போட்டியில், மினா இல்ல அணியை 1-0 என்ற புள்ளி அடிப்படையில் வென்று சம்பியனானது.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அரபா இல்லத்தைச் சேர்ந்த எல். இல்மா தெரிவு செய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .