2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது மினுவாங்கொட யட்டியன இளைஞர்

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 06 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெஹலிய றம்புக்வெல்ல சவால் கேடயத்துக்கான அகில இலங்கை ரீதியில் கண்டி லங்கா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் மினுவாங்கொட யட்டியன இளைஞர் கிரிக்கெட் கழகம் சம்பியனானது.

கண்டி, மடவளை மதீனா தேசிய கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு லுக்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே யட்டியன இளைஞர் கிரிக்கெட் கழகம் சம்பியனாகியிருந்தது.

நாடாளவிய ரீதிய 46 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யட்டியன இளைஞர் கிரிக்கெட் கழகம் ஆறு ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்ளைப் பெற்றது.

பதிலுக்கு, 47 ஓட்டங்களை வெற்றியிலகாகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லுக்ஸ் விளையாட்டுக் கழகம், ஆறு ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 43 ஓட்டங்ளையே பெற்று நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சம்பியனான யட்டியன இளைஞர் கிரிக்கெட் கழகத்துக்கு 200,000 ரூபாய் ரொக்கப் பரிசும் கெஹலிய றம்புக்வெல்ல சவால் கேடயமும் வழங்கப்பட்டது.

இரண்டாமிடத்தைப் பெற்ற லுக்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு 100,000 ரூபாய் ரொக்கப் பரிசும், இரண்டாமிடத்துக்கான கிண்ணமும் வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியின் நாயகன், தொடரின் நாயகனாக யட்டியன இளைஞர் கிரிக்கெட் கழகத்தைச் சேர்ந்த மொகமட் ரிகாஸ் தெரிவாகியிருந்தார்.

இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கையணியின் றமித் றம்புக்வெல கலந்துகொண்டிருந்தார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .