2023 ஜூன் 01, வியாழக்கிழமை

தேசியத்தில் இரண்டாமிடம் பெற்ற மருதமுனை மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எல்.எம். ஷினாஸ்

அகில இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சமபோச கால்பந்தாட்டத் தொடரில் இரண்டாமிடம் பெற்ற   மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அணியினரை வரவேற்கும் நிகழ்வானது, பாடசாலை அதிபர் எம்.ஜே. அப்துல் ஹஸீப் தலைமையில் மருதமுனை மண்ணில் அண்மையில் நடைபெற்றது.

பொலன்னறுவை மைத்திரிபால சிறிசேன மைதானத்திலும், றோயல் கல்லூரி மைதானத்திலும் நடைபெற்று முடிந்த இத்தொடரின் இறுதிப் போட்டியில் கண்டி களுகம்மான கெலி ஓயா மகா வித்தியாலயத்திடம் அல் – மனார் மத்திய கல்லூரி தோல்வியடைந்திருந்தது. போட்டியின் வழமையான நேரத்தில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்து 2-3 என்ற ரீதியில் பெனால்டியிலேயே அல்-மனார் மத்திய கல்லூரி தோல்வியடைந்திருந்தது.

அல்-மனார் மத்திய கல்லூரி 112 ஆண்டு கால வரலாற்றில் அகில இலங்கை ரீதியாக கால்பந்தாட்டத் தொடர் ஒன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உயரிய அடைவாக இது விளங்குகிறது.  

வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட பாடசாலையின் அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப், பிரதி அதிபர்களான எம்.எம்.எம். அனஸ், எம்.எம். ஹஸ்மி, திருமதி. றிஸானா லுத்பி ஹுசைன், உதவி அதிபர் எஸ். முபாறக் உட்பட பகுதித் தலைவர்கள், ஆசிரியர் குழாத்தினர், 16 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணியினர், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.எம்.எம். றஜி, ஐ.எம். இர்பான், எம்.ஜே.எம். நிஹால், எம்.ஜே.எம். தில்சாத், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான ஆர். றிஸாப், ஏ.ஜே. துவைஜ் அஹமட், எம்.எச்.எம். நிஷாத்  உட்பட வெற்றி வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .