Shanmugan Murugavel / 2021 மார்ச் 29 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அண்மையில் ஒழுங்கு செய்திருந்த இராஜதந்திர கிரிக்கெட் தொடரில் செஞ்சிலுவைச் சங்க அணி சம்பியனாகியது.
பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வை ஒட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற ஐந்து ஓவர்களைக் குறித்த தொடரில் பல்வேறு உயர் ஸ்தானிகராலயங்கள், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்தன.
தொடரின் ஆரம்ப விழாவில் விழாவில் தூதரக முக்கிய உறுப்பினர்கள் உட்பட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர். உள்ளூர் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கிய அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டாக், சம்பியனான, இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களையும், மூன்றாமிடம் பெற்ற, நடுவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்திருந்தார்.
22 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
1 hours ago
1 hours ago