2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா ராஜ்குமார் வெள்ளிப் பதக்கம்

Editorial   / 2019 நவம்பர் 11 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக உடற்கட்டழகர் போட்டியில் நுவரெலியாவைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.இது டுபாயில் நடைபெற்றது.  ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய மலையகத்தைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 672 வீரர்கள் பங்குபற்றியிருந்த இம்முறை போட்டிகளில் இலங்கை சார்பாக 11 வீரர்கள் கலந்துகொண்டனர்.

நுவரெலியா மாவட்டம், லபுக்கலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மாதவன் ராஜ்குமார், கடந்த வருடம் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய உடற்கட்டழகர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .