2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனான புத்தளம் நாகாஸ்

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , பி.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் சிற்றி கலக்ஸியின் மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் புத்தளம் நாகாஸ் அணி சம்பியனானது.

அணிக்கு தலா ஆறு பேரைக் கொண்ட நான்கு ஓவர்களைக் கொண்ட16 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் புத்தளம் லவ்பேர்ட்ஸ் அணியை வென்றே நாகாஸ் சம்பியனானது.

நாகாஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நாகாஸ், நான்கு ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 46 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லவ்பேர்ட்ட்ஸ், நான்கு ஓவர்களில் 40 ஓட்டங்களையே பெற்று ஐந்து ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

லவ்பேர்ட்ஸுக்கு கடைசிப் பந்துக்கு ஆறு ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் மிகவும் சிறப்பாக பந்து வீசிய நாகாஸின் ஆர்.எஸ். ரிஸ்னி சராப் கடைசி பந்தில் எந்த ஓட்டமும் கொடுக்காமல் தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

நாகாஸ் அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த எம்.ஏ. நிசாத் போட்டியின் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .