2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்தில் இருந்து முற்றாக பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது.

இதை புனர்நிர்மாணம் செய்து மக்கள் பாவனைக்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மிக நீண்டகாலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமை (18) அன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

29.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. இக் காரியாலயம் நீண்டகாலமாக பழுதடைந்துள்ளதால் களுவாஞ்சிகுடி தபாலக நடவடிக்கைகள் வாடகை கட்டடத்திலேயே தற்போது வரைக்கும் இயங்கி வருகின்றது.

இதன் போது பாராளுமன்றஉறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெந்தலால்ரத்னசேகரன்,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்,  பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால்மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் திணைக்கள அதிகாரிகள்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

.சக்தி   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X