Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 02 , பி.ப. 07:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராஜா மலர்வேந்தன்
மடுல்சீமை தமிழ் தேசிய பாடசாலை ஏற்பாடு செய்து நடாத்திய லுணுகல பிரதேச மடுல்சீமை எல்லைக்குட்பட்ட ஆசிரியர்கள் பங்குபற்றிய நட்பு ரீதியிலான கரப்பந்தாட்டத் தொடரானது, மடுல்சீமை தமிழ்த் தேசிய பாடசாலை விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
இதன்போது மடுல்சீமை தமிழ்த் தேசிய பாடசாலை ஆசிரியர்கள் அணி, பட்டாவத்த தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள் அணி, மடுல்சீமை ஆரம்பபிரிவு ஆசிரியர்கள் அணி ஆகிய மூன்று அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இப்போட்டித்தொடரின் இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய பட்டாவத்த தமிழ் வித்தியாலய ஆசிரியர்கள் அணி மற்றும் மடுல்சீமை ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் அணி மோதின.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் மடுல்சீமை ஆரம்ப்பிரிவு ஆசிரியர்கள் அணி வெற்றிபெற்று கிண்ணத்தைச் சுவிகரித்தது.
இப்போட்டியில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சிகரமாக போட்டித்தொடரில் பங்குபற்றியமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .