2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

விளாஸ்டர் தொடர்: சம்பியனானது பூம் பூம் பிளாஸ்டர்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நூருல் ஹுதா உமர்சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிறீமியர் லீக் தொடரின் இரண்டாவது பருவகாலமானது, சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் தொடரின் முகாமையாளரும், மாவட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருமன எம். பி.எம். றஜாயின் தலைமையில் கடந்த வாரயிறுதியில்ஆரம்பமானது.

மாஸ்டர் பிளாஸ்டர், றெட் லயன்ஸ், பூம் பூம், கிங்ஸ் ஒப் விலாஸ்ட்டர் என நான்கு அணிகள் கலந்து கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய அதிபர் ஏ.சி. ஷரீபுத்தீன், உதவியதிபர் டீ.கே.எம். சிராஜ், கழக தவிசாளர் ஏ.எல். முஹம்மட், கழக தலைவர் முகம்மட் இம்தாத், கழக பொதுச்செயலாளர் ஏ.சி.எம். நிஸார், முக்கிய நிர்வாகிகள் எனப் பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மாஸ்டர் பிளாஸ்டர் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்படுத்தாடிய பூம் பூம் அணியின் அதிரடியான  துடுப்பாட்டத்தால் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 அவ்வணி ஓட்டங்களைப் பெற்றது.

பூம் பூம் அணி மாஸ்டர் பிளாஸ்டர் அணியினருக்கு 133 எனும் வெற்றியிலக்கை நிர்ணயித்தது. இருந்தாலும் 8.5 ஓவர்களை சந்தித்து சகல விக்கட்டுக்களையும் இழந்த மாஸ்டர் பிளாஸ்டர் 85 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.  இதனால் 45 ஓட்டங்களினால் பூம் பூம் அணி சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக பூம் பூம் அணி வீரர் ஏ.எம். இஸட். இஸ்ரத் தெரிவானார். தொடர்பின் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக 172 ஓட்டங்களை குவித்த பூம் பூம் அணி வீரர் ஏ.என்.எம். ஆபாக்கும், அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரராக 8 விக்கட்டுக்களை வீழ்த்திய பூம் பூம் அணி வீரர் ஏ.எம். இஸட். இஸ்ரத்தும் தெரிவானதுடன் , 11 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்த ரெட் லயன்ஸ் அணியின் வீரர் சி.எம்.எம். முனாஸ் மற்றும் சிறந்த களத்தடுப்பை மேற்கொண்ட ஏ.கே.எல். அப்லால் ஆகியோர் சிறப்பு விருதுகளையும் பெற்றுக் கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .