2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

ஹெல்பிங் மைண்ட் செம்பியன் ஆனது ’’வத்தளை எட்லஸ்’’

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம்

புலத்சிங்கள பொது விளையாட்டு  மைதானத்தில், நேற்று (26) நடைபெற்ற அணிக்கு எட்டுப் பேர் கொண்ட திறந்த  சினேகபூர்வ  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில்,  "வத்தளை எட்லஸ்"  விளையாட்டு கழக கிரிக்கெட்  அணி  "இங்கிரிய சூப்பர் பிரண்ட்ஸ்" விளையாட்டு கழக  கிரிக்கெட் அணியை ஏழு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, "2020-களுத்துறை ஹெல்பிங் மைண்ட் செம்பியன் கிண்ணத்தை" சுவீகரித்துக் கொண்டது.

புலத்சிங்கள பிரதேச சபை (ஐ.தே.க)  உறுப்பினர் இந்திக்கா நிரோஷனி பொன்னம்பலத்தின் "களுத்துறை ஹெல்பிங் மைண்ட்" அறக்கட்டளைகள் அமைப்பினால் (கே.எச்.எம்) ஏற்பாட்டு செய்யப்பட்ட அணிக்கு எட்டுப் பேர் பங்கேற்ற  ஐந்து ஓவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டியில், வத்தளை எட்லஸ் விளையாட்டு கழக கிரிக்கெட் அணியும் இங்கிரிய சூப்பர்  பிரண்ட்ஸ் விளையாட்டு கழக கிரிக்கெட் அணியும் மோதிக்கொண்டன.

இதன் அடிப்படையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிரிய சூப்பர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி ,  இரண்டு ஓவர்களில் விக்கட் இழப்பின்றி  எட்டு ஓட்டங்களைப் பெற்றது. இதற்கு பதிலளித்த ஆடிய வத்தளை எட்லஸ் கிரிக்கெட் அணி முதல் இரண்டே பந்துகளில் பத்து ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்ததுடன்,  2020-களுத்துறை ஹெல்பிங் மைண்ட் வெற்றிக் கிண்ணத்தையும் 20,000 ரூபாய் பரிசுத் தொகையும் சுவீகரித்துக் கொண்டது.

இங்கிரிய சூப்பர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்துக்கான வெற்றி கிண்ணத்தையும்  10,000 ரூபாய் பணப் பரிசையும் வென்றதும், முகமதி தோட்ட விளையாட்டு கழக கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .