2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் சதுரங்க போட்டி.

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , பி.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். அஷ்ரப்கான்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இலங்கை தேசிய புதியவர்கள் சதுரங்க சம்பியன்ஷிப்பானது அண்மையில் நிந்தவூர் கல்முனை அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இலங்கை சதுரங்க சம்மேளன பிரதிநிதியான எ.எம். ஸாகீர் அஹமட்டின் ஒழுங்கமைப்பில், இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 42 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தலா ஐந்து போட்டிகள் வீதம் நடாத்தப்பட்ட இத்தொடரில் மூன்று பிரதான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், 15 போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரின் சம்பியனாக டி.எம்.என்.கே. திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார், இரண்டாவது வெற்றியாளராக எம்.ஜே. இஸ்ஸத் ஸஹ்மியும், மூன்றாவது வெற்றியாளராக ஐ.கே.எம். ஆகில்கான் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .