2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

அந்நூர் கலாபீட அணிக்கு வெற்றிக் கிண்ணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 23 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட கிரிக்கெட் அணியினரின் புதிய சீருடை அறிமுக நிகழ்வும், சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி யொன்றும் நேற்று முன்தினம் கலாபீட மைதானத்தில் நடைபெற்றது.

நாவலடி மர்கஸ் அந்நூர்  மற்றும் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற சிநேக பூர்வ பதினைந்து ஓவர்களைக் கொண்ட  மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மர்கஸ் அந்நூர் அணியினர் பதினைந்து ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அணியினர் பதினாங்கு ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப் போட்டியில் வெற்றிபெற்ற நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அணிக்கு நிருவாகத்தினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X