Shanmugan Murugavel / 2021 நவம்பர் 30 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ரீ.கே. றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையலான 33ஆவது மெய்வல்லுநர் விளையாட்டு விழாவானது, அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவிகளிலிருந்தும் மூவினங்களையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்து கொண்ட இவ்விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று அக்கரைப்பற்று பிரதேச செயலக இளைஞர் கழகம் சம்பியனாக தெரிவானது.

இவ்விளையாட்டு விழாவில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் அணி இரண்டாமிடத்தையும், மூன்றாமிடத்தை நிந்தவூர் பிரதேச செயலக இளைஞர் அணியும் பெற்றுக் கொண்டன.

மகளிர் பிரிவில் பதியத்தலாவ பிரதேச செயலக இணி சம்பியனாகத் தெரிவானதுடன், இரண்டாமிடத்தை தொகியத்த கண்டி மகளிர் அணியினர் பெற்றுக் கொண்டனர்.
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து நடாத்திய இவ்விளையாட்டு விழா தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டபில்யூ. ஏ. தமயந்தி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபில்யூ. டி. வீரசிங்க பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ. அகமட் சாபீர் கலந்துகொண்டார்.
இவ்விழாவில், விசேட அதிதிகளாக அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, சரத் வீரசேகர ஆகியோரின் இணைப்பதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசிங்கவின் பிரதேச இணைப்பதிகாரிகள், விளையாட்டுத்துறை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
25 minute ago
32 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago
8 hours ago