2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கரமில் மட்டக்களப்பு பாடசாலைகள் வென்றன

எஸ். சசிக்குமார்   / 2017 மே 20 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடத்திய, மாகாண நிலை கரம் போட்டிகளில், மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் வெற்றிபெற்றுள்ளன. திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில், 17 வயதுக்கு உட்பட்ட, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டிகள், நேற்று (19) நடைபெற்றன.  

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 63 பாடசாலைகளின் அணிகள், போட்டிகளுக்கு விண்ணப்பம் செய்திருந்த நிலையில், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 22 அணிகளும், 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 16 அணிகளும் பங்கு கொண்டிருந்தன.   

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், முதலாமிடத்தைப் பெற்றதோடு, மிச் நகர் அரசினர் கலவன் முஸ்லிம் வித்தியாலயம், இரண்டாமிடத்தையும், ஊரணி சரஸ்வதி வித்தியாலயம், மூன்றாமிடத்தையும் பெற்றன.  

20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், றகுமானியா மகா வித்தியாலயம், முதலாமிடத்தையும், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயம், இரண்டாமிடத்தையும், புனித மிக்கேல் கல்லூரி, மூன்றாமிடத்தையும் பெற்றன.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .