2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மத்திய மாகாண பூப்பந்தாட்டத் தொடர்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 21 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கே. குமார்

மத்திய மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மத்திய மாணத்துக்கான பூப்பந்தாட்டத் தொடரானது, நுவரெலியா புதிய நகர மண்டப விளையாட்டு உள்ளரங்கில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.

இதில், மாணவிகளுக்கான "ஏ" பிரிவில் கண்டி ஐ (High) மகளிர் பாடசாலை முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி டக் லங்கா கழகமும், மூன்றாமிடத்தை கண்டி விகாரமாதேவி மகளிர் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

மாணவர்களுக்கான "ஏ" பிரிவில் எட்டோனியன் பூப்பந்தாட்டக் கழகம் முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை நுவரெலியா டி.டபிள்யூ பூப்பந்தாட்ட அகடமியும், மூன்றாமிடத்தை கண்டி அணியினரும் பெற்றனர்.

மாணவிகளுக்கான "பீ " பிரிவில் கண்டி ஐ (High) மகளிர் பாடசாலை முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி ஐ.சீ.பீ.டி பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தை கண்டி சந்தனநந்தா பௌத்த கல்லூரியும் பெற்றனர்.

மாணவர்களுக்கான "பீ" பிரிவில் நுவரெலியா ஈ.வீ விளையாட்டு கழகம் முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி  ஐ.சீ.பீ.டி பல்கலைக்கழகமும், மூன்றாமிடத்தை கண்டி  பூப்பந்தாட்ட அகடமியும் பெற்றனர்.

மாணவிகளுக்கான "சீ" பிரிவில் கண்டி  மா மாயா மகளிர் கல்லூரி  முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி  சுவர்ணமாலி மகளிர் கல்லூரியும், மூன்றாமிடத்தை கண்டி புஸ்பாநந்த மகளிர் கல்லூரியும் பெற்றனர்.

மாணவர்களுக்கான "சீ" பிரிவில் கண்டி சந்தனநந்தா பௌத்த கல்லூரி முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை ஹட்டன் பூப்பந்தாட்டக் கழகமும், மூன்றாமிடத்தை கெலிஒயா ஹரிசாமஸ் பூப்பந்தாட்டக் கழகமும் பெற்றனர்.

மாணவிகளுக்கான "டீ" பிரிவில் கண்டி புஸ்பாநந்த மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி சென். அந்தனிஸ் மகளிர் பூப்பந்தாட்டக் கழகமும், மூன்றாமிடத்தை கம்பளை பூப்பந்தாட்ட அகடமியும் பெற்றனர்.

மாணவர்களுக்கான "டீ" பிரிவில் கெலிஒயா அசிராஜ் மாணவர் கல்லூரி முதலாமிடத்தையும், நுவரெலியா லைசியம் சர்வதேச பாடசாலை இரண்டாமிடத்தையும் கண்டி சென். அந்தனிஸ் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

மாணவிகளுக்கான "ஈ" பிரிவில் கண்டி விகாரமாதேவி மகளிர் கல்லூரி முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி திரித்துவக் கல்லூரியும், மூன்றாமிடத்தை நுவரெலியா லைசியம் சர்வதேச பாடசாலையும் பெற்றுக் கொண்டது.

மாணவர்களுக்கான "ஈ" பிரிவில் கெலிஒயா  அசிராஜ் மாணவர் கல்லூரி முதலாமிடத்தையும், கண்டி திருத்துவக் கல்லூரி இரண்டாமிடத்தையும், நுவரெலியா அவ லேடிஸ் சர்வதேச பாடசாலை மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

13 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் கண்டி மலையக பூப்பந்தாட்டக் கழகம் முதலாமிடத்தையும், இரண்டாமிடத்தை கண்டி டக் லங்கா கழகமும், மூன்றாமிடத்தை கண்டி விகாரமாதேவி மகளிர் கல்லூரியும் பெற்றது.

13 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கண்டி தர்மராஜ் கல்லூரி முதலாமிடத்தையும், கண்டி அந்தோனியன் பூப்பந்தாட்டக் கழகம் இரண்டாமிடத்தையும், கண்டி ஸ்ரீ சுமங்கல வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

11 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் கண்டி சென். அந்தனிஸ் கல்லூரி முதலாமிடத்தையும், கண்டி பூப்பந்தாட்ட அகடமி இரண்டாமிடத்தையும், கண்டி விகாரமாதேவி மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

11 வயதுக்குகு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கண்டி அந்தோனியன் பூப்பந்தாட்டக் கழகம் முதலாமிடத்தையும், கெலிஒயா  அசிராஜ் மாணவர் கல்லூரி இரண்டாமிடத்தையும், நுவரெலியா லைசியம் சர்வதேச பாடசாலை  மூன்றாமிடத்தையும் பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .