2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

மைலோ வெற்றியாளர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைப்பு

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறுவர்கள் உடற்பயிற்சிகளை சுறுசுறுப்பாக முன்னெடுப்பதற்கு உதவ வேண்டும் என்ற வர்த்தகநாம ஊக்குவிப்புப் பிரச்சாரத்துக்கு ஆதரவாக, மைலோ பிரசாரத்தின் வெற்றியாளர்களுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரான நாமல் ராஜபக்ஷ, விசேட நிகழ்வொன்றில் சைக்கிள்களை பரிசளித்துள்ளார்.

தேசிய சைக்கிளோட்ட ஞாயிற்றுக்கிழமை என்ற ஊக்குவிப்பு பிரசாரத்தை அண்மையில் நாமல் தொடக்கி வைத்துள்ள நிலையில், சைக்கிளோட்டுதல் என்பது வீட்டுக்கு வெளியில் நேரத்தை செலவிடுவதற்கும், உடற்பயிற்சியை மேற்கொள்வதற்கும் ஒரு சிறந்த வழியாகும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

மைலோவின் சமீபத்திய ஊக்குவிப்புப் பிரச்சாரம், தொலைதூர கற்றல் மற்றும் இணைய வகுப்புகளுடன், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிப்புற விளையாட்டு நேரம் மற்றும் உடற்பயிற்சிகள் இன்மை தொடர்பில் கவலைகளுடன், பல இன்னல்களைச் சந்தித்து வருகின்ற ஒரு காலகட்டத்தில் மொத்தமாக 10,000 சிறுவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான சைக்கிள்கள், ஸ்கேட்போர்டுகள், கூடைப்பந்துகள், உதைபந்துகள், மடிக்கணினிகள், டப்கள், றீலோட்டுகள் மற்றும் பலவற்றை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X