2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

யங் ஸ்டாருக்கு புத்தளம் உள்ளக அரங்கம்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்படுகின்ற தேசிய மட்டத்திலான கரப்பந்தாட்டத் தொடரில் புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடையாமோட்டையைச் சேர்ந்த யங் ஸ்டார் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. 

புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக், குறித்த அணியினரின் மைதானத்தின் தேவைப்பாட்டைக் கருத்திற் கொண்டும், வீரர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டும் புத்தளம் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கை அவர்களின் பயிற்சிக்காக இலவசமாக வழங்கியுள்ளார். 

சர்வதேச மட்டத்திலான கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் இல்யாஸ் மரைக்கார் குறித்த அணியின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுகிறார். 

ரபீக், விளையாட்டரங்குக்கு விஜயம் செய்து வீரர்களின் பயிற்சி  நடவடிக்கைகளைப் பார்வையிட்டதோடு விரைவில் நடைபெற இருக்கும் எஞ்சிய போட்டிகளிலும் வென்று சம்பியன் பட்டத்தை சுவீகரிப்பதற்காக வீரர்களுக்கு  வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X