Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். அப்ராஸ்
அம்பாறை மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தால் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ரீதியில் இடம்பெற்ற 20ஆவது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 10,000 மீற்றர் நெடுந்தூர ஓட்டத்தில் கலந்து கொண்டு முதலாமிடத்தை நற்பிட்டிமுனை ஹீரோஇளைஞர் சேவை கழகத்தின் மூலம் கலந்து கொண்ட எம்.ஜே. அஜித் அக்ரம் என்பவர் தனதாக்கிக் கொண்டார்.
இதன் மூலம் இவர் தேசிய ரீதியில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெறும் மெய்வல்லுநர் போட்டியில் பங்கு கொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவரது சகோதரர் எம்.ஜே. சஜித் அஸ்லம் என்பவர் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டார்.
குறித்த இருவரின் வெற்றியின் மூலம் நற்பிட்டிமுனை ஹீரோ இளைஞர் சேவை கழகத்துக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025