2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

45ஆவது தேசிய விளையாட்டு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

  பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்திலிருந்து   எஸ்.எம்.அறூஸ் 

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த  45ஆவது தேசிய விளையாட்டு விழா, பதுளை வின்சென்ட்  மைதானத்தில்  கடந்த 24ஆம்  திகதி ஆரம்பித்து நேற்றுடன் நிறைவுபெற்றது.

விளையாட்டுத்துறை  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசிய  விளையாட்டு விழாவை ஆரம்பித்துவைத்தார்.

ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர், விளையாட்டு அபிவிருத்தி  திணைக்களப் பணிப்பாளர் நாயகம் முத்துகல உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார், 2000 துக்கும் அதிகமான மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் 45 ஆவது தேசிய விளையாட்டு விழா ஆரம்பமானது. 

இப்போட்டிகளின் முதல் நாள் காலை நடைபெற்ற பெண்களு க்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரத்தைத் தாவித்  தங்கப் பதக்கத்தைப்   பெற்றுச் சாதனைப் படைத்தார்.இவர் தேசிய விளையாட்டு விழாவில் 3 ஆவது  தங்கப் பதக்க மாகும்.

 பெண்களுக்கான குண்டு  போடுதல்

தங்கப் பதக்கம் பெற்ற  எம்.என்.டி.முத்து நாயக்க -மத்திய மாகாணம் (12.19m)

பெண்களுக்கான  400 மீற்றர்  தடை தாண்டல் ஓட்டம் 

தங்கப் பதக்கம் பெற்ற ஜீ. ஏ.  சாமர துலானி _  தென் மாகாணம்

ஆண்களுக்கான 400 மீற்றர்  தடை  தாண்டல்  ஓட்டம் 

தங்கப் பதக்கம் பெற்ற ஏ. எல். ஏ. ஐ. ரத்மசேன - சப்ரகமுவ மாகாணம்

ஆண்களுக்கான  பரிதி வட்டம்  எறிதல்

தங்கப் பதக்கம் பெற்ற செட். டீ. எம். ஆஸீக் -  கிழக்கு மாகாணம்,  வெள்ளிப் பதக்கம் பெற்ற ஆர். எம். எஸ் நிரோசன - சப்ரகமுவ மாகாணம்

ஆண்களுக்கான 10000 மீற்றர்  ஓட்டம் 

தங்கப் பதக்கம் பெற்ற ஆர். எம். புஸ்ப குமார _ மேல் மாகாணம், வெள்ளிப் பதக்கம்  கே. சண்முகேஸ்வரன் - மத்திய  மாகாணம்.

பெண்களுக்கான 200 மீற்றர்  ஓட்டம் 

தங்கப் பதக்கம் வென்ற அமேஷ டி  சில் வா - மத்திய மாகாணம்.

ஆண்ளுக்கான  200  மீற்றர் ஓட்டம் 

தங்கப் பதக்கம் வென்ற கே. எஸ். எல்.விக்கிரமசிங்க - சப்ரகமுவ மாகாணம்,

ஆண்களுக்கான நீளம் பாய்தல் 

தங்கப் பதக்கம் வென்ற ஜெ. எச். ஜி. சம்பத் -ஊவா மாகாணம்

ஆண்களுக்கான  உயரம் பாய்தல்  நிகழ்ச்சி 

தங்கப் பதக்கம் வென்ற யூ. திவங்க  பெரேரா  மேல் மாகாணம் 

பெண்களுக்கான நீளம் பாய்தல்

 தங்கப் பதக்கம் அஞ்சனி புலவன்ச - மேல் மாகாணம் வெள்ளிப் பதக்கம் 

 டபிள்யூ.பி எல். சுகந்தி - மேல் மாகாணம் 

வெண்கலப் பதக்கம் 

ஆண்ளுக்கான 800 மீற்றர்  ஓட்டம் 

தங்கப் பதக்கம் வென்ற ஜி. ஆர். சதுரங்க -சப்ரகமுவ  மாகாணம் 

வெள்ளிப் பதக்கம் சி. அரவிந்தன் - ஊவா  மாகாணம

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டம் 

தங்கப் பதக்கம் கே. ஜி. டி.எம். எஸ். குமாரசிங்க -  மத்திய  மாகாணம் 

ஆண்களுக்கான  கோலுன்றிப்  பாய்தல் 

தங்கப் பதக்கம்  எரங்க  ஜனித் -மேல் மாகாணம் 

வெள்ளிப் பதக்கம் ஏ. புவிதரன் -  வட மாகாணம் 

ஆண்களுக்காண  4×100 மீற்றர்  அஞ்சலோட்டம் 

தங்கப் பதக்கம் -சப்ரகமுவ மாகாணம் 

வெள்ளிப் பதக்கம் -கிழக்கு மாகாணம் 

 வெண்கலப் பதக்கம் - மேல் மாகாணம்

பெண்களுக்கான  5000 மீற்றர் ஓட்டம்

தங்கப் பதக்கம் - எச். எம். என். எம். நந்தசேன -  கிழக்கு மாகாணம்

 பெண்களுக்கான 10000     மீற்றர் ஒட்டம் 

   தங்கப் பதக்கம் -எம்.என்.எம்.நந்தசேன - கிழக்கு மாகாணம்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஒட்டம்

தங்கப் பதக்கம்  ஜீ.எம்.எஸ்.ஆர்.விஜேவிக்ரம _ சப்ரகமுவ மாகாணம்

பெண்களுக்கான 4x100 மீற்றர் அஞ்சசல் ஓட்டம்

தங்கப் பதக்கம் - மேல் மாகாணம்

வெள்ளிப்பதக்கம் - தென் மாகாணம்

வெண்கலப் பதக்கம் - மத்திய மாகாணம்

 மேலும் நேற்றுமுன்திமிரவு நடைபெற்ற கால்பந்தாட்ட  இறுதிப் போட்டியில்   வட  மாகாணம் முதல் தடவையாக  தங்கப்  பதக்கத்தை  வென்றுள்ளது.

 தென் மாகாணத்துடன் நடைபெற்ற  இறுதிப் போட்டியிலேயே  வட மாகாணம் 4-0 என்ற  கோல்கள் அடிப்படையில் வெற்றி    பெற்றுத் தங்கப்  பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது

இதில்  வெள்ளிப் பதக்கத்தைத்   தென் மாகாணமும் வெண்கலப் பதக்கத்தை  சப்ரகமுவ  மாகாணமும்  பெற்றுக் கொண்டது.

இதில்  எஸ். ஜானரூபன்  சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு    வெற்றிக் கிண்ணமும்  20,000 ரூபாய்ப் பணப் பரிசும்    வழங்கி வைக்கப்பட்டது.

45 வருட  தேசிய  விளையாட்டு  விழா வரலாற்றில்  வட மாகாணம் கால்பந்தாட்டத்தில் முதலாவது தங்கப்  பதக்கத்தைப் பெற்றுக் கொண்டமை    குறிபிடத்தக்கதாகும். 

 

   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X