2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

’மானங்கெட்டவளுக்குத் தண்டனை’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 15 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாஹாடு:

நடத்தை கெட்ட சில பெண்களினால் ஊரும் கெட்டு நாடும் குட்டிச்சுவரான வரலாறுகள் தற்போது உலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மனிதன் தற்போது மிருகத்துக்குச் சமமான செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதைப் பார்க்கும் போது,இன்னும் இன்னும் என்ன நடக்குமென்பதை நினைத்துப் பார்க்க முடியாமலிருக்கின்றது. அண்மையில் இவ்வாறான ஒரு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

  குஜராத்தில், கஜூரி என்ற, பழங்குடி இன கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்குத்  திருமணமான நிலையில், வேறொரு நபருடன் தொடர்பு வைத்து,கணவரை விட்டு  ஓடிய சம்பவமொன்று அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின்னர், ஓடிப்போன மனைவியைப் பிடித்துக்கொண்டு வந்து, ஊர் மக்கள் முன்னிலைப்படுத்தி, இவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டுமென ஊரவர்களே சொல்லவேண்டுமென கணவன் கோரிக்கை விடுத்தார். பின்னர்,  ஊர்மக்கள் செய்த முடிவின் பிரகாரம், 'கணவனை விட்டு ஓடிச் சென்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, கிராமத்தை சுற்றி வலம் வர உத்தரவிட்டனர்'.

இதையடுத்து, அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து கணவன், அவரை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்றுள்ளார்.  இந்த சம்பவங்களைப் படம் பிடித்த அந்த கிராமத்து மக்கள், அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .