2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டன

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக, ஆறுகள் நீரோடைகள் பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும்  பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேகத்தின் இரு வான்கதவுகளும், மஸ்கெலியா - மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும், கெனியோன் நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவும் இன்று (11) காலை திறக்கப்பட்டன.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இன்று காலை 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனால் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதே வேளை நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X