2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் மினி சூறாவளி

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அட்டாளைச்சேனை, கோணாவத்தை பிரதேசத்தில் நேற்று (15) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக, அப்பகுதியின் கரையோரப் பிரதேசங்களில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கோணாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சில மீனவ வாடிகள், மீனவ குடிசைகளின் கூரைகள் பலத்த காற்றின் காரணமாக சுக்குநூறாகியுள்ளன.

மீனவக் குடிசைகளில் இருந்த பெறுமதி மிக்க கடற்றொழில் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, கோணாவத்தை பிரதேசத்தில் உள்ள சில வீடுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வானிலை சீரின்மையால் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலத்த காற்றின் காரணமாக கடலலைகள் சுமார் 10 அடிக்கு மேலெழுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .