Editorial / 2023 மே 07 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
150 ஆண்டுகளுக்கும் மேலான செழுமையான வரலாற்றை பாரம்பரியமாகக் கொண்ட இலங்கை தேயிலையின் தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க மத வழிபாட்டுத் தலங்களில் தேயிலை தொழில் துறையில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் ஆசீர்வாதம் வழங்கும் வருடாந்த "தேயிலை திருவிழா" நாடளாவிய ரீதியில் (06.05.2023) கொண்டாடப்பட்டது.
பெருந் தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் ஏற்பாட்டில் கொட்டாபலை வரலாற்றுச் சிறப்புமிக்க கட்பருவ ரஜமகா விஹாரையில் தேசிய வைபவத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, நாட்டில் 12 மாவட்டங்களை உள்ளடக்கிய 08 சமய ஸ்தலங்களில் ஒரே நேரத்தில் இந்த ஆசீர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்துக்கான ஆசீர்வாத நிகழ்வுகள் இலங்கை தேயிலை சபையின் தலைவர்
நிராஜ் டி மெல் தலைமையில் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள், மற்றும் காணி உரிமையாளர்களின் பங்களிப்புடன் ஆறாவது முறையாக வரலாற்றுச் சிறப்பு மிக்க சீதா எளிய சீதையம்மன் ஆலயம், ஸ்வர்ணகிரி மகா விஹாரை,
மற்றும் பரிசுத்த திருத்துவ தேவாலயம் ஆகியவற்றில் சனிக்கிழமை (06) அன்று இடம்பெற்றது.
இதன்போது தேயிலை தொழிலில் பங்களிக்கும் அனைத்து தரப்பினரையும் ஆசிர்வதித்து, அவர்கள் வாழ்வதற்கான வலிமையையும், தைரியத்தையும், உறுதியையும் ஏற்படுத்த விசேட பூசைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் இடம்பெற்றது.
அத்துடன் தேயிலை தொழிலுக்கு முன்னோடியாக திகழ்ந்த தேயிலை தொழிலின் தந்தை என அழைக்கப்படும் ஜேம்ஸ் டெய்லர் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தும்,இதுவரை தேயிலை கைத்தொழில் முன்னேற்றத்திற்காக தமது உயிரை தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்தும் இலங்கை தேயிலை சபையால் இந் நிகழ்ச்சித்திட்டம் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



38 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
55 minute ago