2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

திருமணத்துக்கு வற்புறுத்தக்கூடாது

Freelancer   / 2022 ஜூலை 01 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

''பெண் குழந்தைகள் திருமணம் செய்துக்கொள்ள பெற்றோர் வற்புறுத்தக் கூடாது,'' என, கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கிரண்பேடி உரையாற்றினார். 

பெண்களின் வணிக கூட்டமைப்பான, 'எப்.ஐ.சி.சி.ஐ., - எப்.எல்.ஓ.,'வின் கோவை கிளை சார்பில், புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண் பேடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, கோவையில் நடந்தது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பெண் குழந்தைகள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல், சுய சார்புடன் இருக்க பெற்றோர் கற்று தர வேண்டும். 

மேலும், அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தக் கூடாது. பெண்கள் வகுப்பறை கல்வியை மட்டும் கற்காமல் விளையாட்டுத் துறையில் ஈடுபட வேண்டும். அப்போது போட்டி மனப்பான்மையும், வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் வரும். டென்னிஸ் விளையாட்டில் இருந்த அனுபவம் தான் நான் வகித்த பொறுப்புகளில் என்னை சிறப்பாக செயல்பட உதவியது என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .