Niroshini / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வடபிராந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களது மாதாந்த நீர்ப்பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் ஏற்கெனவே உள்ள நீர்ப்பட்டியல் நிலுவைகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில், நீர்ப்பட்டியல் செலுத்துவதற்காக வரிசையில் நின்று நீங்கள் உங்களது பாதுகாப்புக்கு தீங்கேற்படாதவாறு, வீட்டில் இருந்தவாறு, தேசிய நீ வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஸ்மார்ட் சோன் (Smart Zone - waterboard.lk) என்ற இணையத்தள முகவரி ஊடாக மாதாந்த நீர்ப்பட்டியல் கட்டணங்களை செலுத்தலாம்.
அல்லது இணையம் மூலமான வங்கிகள், தொலைத்தொடர்பு சேவைகள், அரச தனியார் சேவை வழங்குநர்கள் மூலமும் நீங்கள் உங்களது கொடுப்பனவுகளை செலுத்திக்கொள்ள முடியும்.
அத்துடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா, யாழ்ப்பாணம் கிளை காரியாலயங்களின் காசாளர் பிரிவிலும் தங்களுக்கான கொடுப்பனவுகளை வழமைபோன்று செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago