2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி திருட்டு இருவர் கைது

Freelancer   / 2023 மே 11 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்துணைப்படையில் கடமையாற்றும் படல்கும்புர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் படல்கும்புரவில் இருந்து பதுளைக்கு பணியின் நிமித்தம் சென்று, மீண்டும் படல்கும்புர நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்து போது, பதுளை-பசறை 8 ஆம் கட்டை பகுதியில் மாலை 4 மணியளவில் தேநீர் அருந்துவதற்காக முச்சக்கரவண்டியை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

அதன்பின் தேநீர் அருந்திவிட்டு வந்து பார்த்தவேளை, முச்சக்கரவண்டி காணாமல் போயிருந்ததை அவதானித்துள்ளார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த CCTV கமராவில் பதிவாகியிருந்த காணொளியை பார்வையிடுகையில், இருவர் வந்து குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திக்கொண்டு செல்வது தெரிய வந்துள்ளது. 

மேலும் குறித்த முச்சக்கரவண்டி பதுளை-பசறை 10 கட்டை சந்தி யூடாக  நமுனுகெல சென்று, அதன்பின் ஹிங்குருகடுவ நோக்கி பயணித்தமை தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, ஹிங்குருகடுவ பொலிஸாரின் உதவியுடன் பசறை பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்தனர். 

இதன்போது, உக்கம்பிட்டிய பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், மொனராகல பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, திருடப்பட்ட 9 இலட்சம் பெறுமதியான முச்சக்கரவண்டியும், முச்சக்கரவண்டியினுள் இருந்து, 6500 ரூபாய் பெறுமதியான கைபேசி மற்றும் ஏடிஎம் அட்டை மீட்கப்பட்டுள்ளது. 

இதேவேளை 29ஆயிரம் ரூபாய் பணம் முச்சக்கரவண்டியினுள் இருந்ததாகவும் அதை காணவில்லை எனவும் முச்சக்கரவண்டி உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் தாங்கள் பணம் எதனையும் முச்சக்கரவண்டியிலிருந்து எடுக்கவில்லை என கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .