2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

‘மட்டக்களப்பில் 65,024 பேர் தடுப்பூசிகளை ஏற்றினர்’

Princiya Dixci   / 2021 ஜூலை 13 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 65,024 பேருக்கு, கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் இன்று (13) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை முடிந்த 24 மணித்தியாலங்களில் 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்துக்குக் கிடைக்கப்பெற்ற 50,000 தடுப்பூசிகளில் 37,024 தடுப்பூசிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகளில் 14,981 ஏற்றப்பட்டுள்ளன.

மாவட்டத்திலுள்ள 12,000 ஆசிரியர்களில் 7,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இவ்வாறு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 65,024 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன” என்றார்

இதேவேளை, காத்தான்குடி பகுதியில் 3 பிரிவுகள் இன்று (13) விடுவிக்கப்படவள்ளதோடு, மாமாங்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவில்  அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருவதால் தொடர்ந்தும் அப்பகுதி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .