2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு ஆறுதல்

Ilango Bharathy   / 2023 மே 16 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கள்ளச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அண்மையில் விழுப்புரம் மாவட்டம் ,மரக்காணம் அருகே இடம்பெற்றுள்ளது. 

மேலும் அரச வைத்தியசாலையில்  40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 அப்போது, சிகிச்சை பெற்றுவருபவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, வைத்தியசாலையில்  வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவேண்டும் என்றும் மருத்துவர்களிடம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X