Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 27 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வடக்கு - தெற்கு இளைஞர்களுக்கு இடையிலான அனுபவ கல்வி பரிமாற்ற நிகழ்வு, சனிக்கிழமை (25) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வின் இறுதியில் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது.
இலங்கையின் 15 மாவட்டங்களில் இருந்து வருகை தந்த அமைப்புகளின் உறுப்பினர்கள், நிலை மாறு கால நீதி தொடர்பாக யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் எவ்வாறான நிலைமை காணப்படுகிறது என்பது தொடர்பாக மூன்று நாள்கள் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த களவிஜயம் தொடர்பில் இறுதி அறிக்கை, கலந்துரையாடல் என்பன யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதன் போது, இராணுவமாக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்புகள், விடுவிக்கப்படாத காணிகள், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago