Ilango Bharathy / 2023 மார்ச் 26 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவையில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பேராசிரியர் ஒருவர் தனக்கு தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மாணவனொருவன் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் முனைவர் பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவனொருவனே இவ்வாறு புகார் அளித்துள்ளார். குறித்த புகாரில் அக்கல்லூரியின் பேராசிரியரான மதன்சங்கர் என்பவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், கடந்த ஓன்றரை ஆண்டு காலமாக அவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனவும் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்டவர் அவர் எனவும், அவர் சொல்லும் படியாக கேட்காமல் இருந்தால் மதிப்பெண் போட மாட்டார் எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
இப்புகாரினையடுத்து மேட்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பேராசியர் பாலியல் தொந்தரவு கொடுத்து இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஐசிசி கமிட்டி விசாரணை அறிக்கையும், பாதிக்கப்பட்ட மாணவருக்கும், கல்லூரி டீனும் இடையே நடைபெற்ற குரற்பதிவும் வெளியாகியது. இதில் மாணவரை , பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.
விசாரணை அறிக்கையில் முனைவர் பட்ட மாணவரை இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று மதன்சங்கர் பாலியல் தொந்தரவு செய்துள்ளமையும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இச்சம்பவமானது கோவை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .