Ilango Bharathy / 2023 மே 17 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ப்பிணியொருவர் வெயிலின் தாக்கத்தினால் உயிரிழந்த சம்பவம் மராட்டியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான கர்ப்பிணியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 9 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே அவர் வீட்டில் இருந்து கோடை வெயிலில் 7 கிலோமீற்றர் தூரம் நடந்து வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது போது அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவரை குடும்பத்தினர் அம்புலன்ஸ் மூலம் காசா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த 9 மாத குழந்தையும் உயிரிழந்தது. விசாரணையில் 7 கி.மீ. வெயிலில் நடந்து சென்றுள்ளமையே அவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .