2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று கிராம சேவகர் பிரிவுகள் அபிவிருத்தி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸகி பங்குபற்றுதலுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்றது.

தேசிய காங்கிரஸ் தலைவரும், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, எதிர்காலத்தில் கிராம மட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அரசின் சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புதல் எனும் தொனிப்பொருளில், கிராமங்களை எழுச்சிமிக்கதாய் மாற்றுதல் வேலைத்திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள கிராம சேவகர் பிரிவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசீக், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ. காதர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஸீர், உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் கிராம மட்ட அமைப்பினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .