2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

கடவுச்சீட்டு பெறுவதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Freelancer   / 2022 ஜூன் 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அகில இலங்கை அரச அங்கீகாரம் பெற்ற படப்பிடிப்பாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற இணையவழி தொழில்நுட்ப கோளாறினை சீர் செய்து தருமாறு, அகில இலங்கை நிபுணத்துவ அனுமதி பெற்ற படப்பிடிப்பாளர்கள் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவர் பிரகாஸ் ரங்கநாதன் தெரிவித்தார்.

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கும், அரச அங்கீகாரம் பெற்ற படப்பிடிப்பாளர்களுக்குமிடையிலான தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது காரணமாக படப்பிடிப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) மாலை அக்கரைப்பற்று மெங்கோ காடன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அகில இலங்கை அனுமதி பெற்ற படப்பிடிப்பாளர்கள் எதிர்நோக்கி வரும் தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,  பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும், இதுவரை அவை தீர்த்து வைக்கப்படவில்லையெனவும் தெரிவித்தார்.

தற்போது நாடு பொருளாதார ரீதியாக பாதிப்புக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், கூடுதலான பொது மக்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்லுகின்ற இக் காலகட்டத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்காக அனுமதி பெற்ற படப்பிடிப்பு நிலையங்களுடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்பப்படும் புகைப்படம் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடையாததனால் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

அரச அங்கீகாரம் பெற்ற படப்பிடிப்பாளர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அண்மைக்காலமாக படப்பிடிப்பாளர்கள் கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான புகைப்படத்தினை இணையவழி ஊடாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அனுப்புவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இணைய வழி சேவையகம் சரியான முறையில் இயங்காததனால் படப்பிடிப்பு நிலையங்களை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பலர் தொழில் இழக்க நேரிடுவதோடு கடவுச்சீட்டு பெறுபவர்களும் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வங்கியில் பெறப்பட்ட கடனை படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் மீள செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் இணையவழி சேவையகம் திருத்தப்பட்டு வழமை நிலைக்கு திரும்பாத பட்சத்தில், அகில இலங்கை அனுமதி பெற்ற படப்பிடிப்பாளர்கள் சங்கம் கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .