2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

கட்டுக்கலைத் தோட்டத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை- கட்டுக்கலை தோட்டத்தில் தோட்ட உதவி அதிகாரி மீதும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 11 சந்தேக நபர்களும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ம் திகதி கட்டுக்கலை தோட்டத்தில் தொழிலாளர்கள் சிலருக்கும் அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது.

 இச்சம்பவத்தில் தோட்ட தொழிலாளர்கள் சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறி அத்தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்கள் இருவர் நுவரெலியா பொது வைத்தியசாலையிலும் தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக கூறி இரு பெண் தொழிலாளர்கள் லிந்துலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 இதனையடுத்து  தோட்ட உதவி அதிகாரி மீதும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 9 சந்தேக நபர்களை (தொழிலாளர்களை) தலவாக்கலை பொலிஸார் கைது செய்து இந்த மாதம் 1ஆம்  திகதி நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் 5ஆம் திகதி வரை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் சந்தேகநபர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X