2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் முப்படை, பொலிஸ் தீவிர ரோந்து

Editorial   / 2021 நவம்பர் 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர ரோந்தில் ஈடுபடுவதுடன், சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த திங்கட்கிழமை(22) வெளியிட்டிருந்திருந்தார்.

இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை, மத்திய முகாம் பொலிஸ் நிலையங்கள், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை மற்றும்  கல்முனை இராணுவ மகாம் உள்ளிட்ட  இடங்களில்  பணியாற்றும்   பாதுகாப்புத் தரப்பினர் இச்செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்..

இத் திடீர் சோதனையில்  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,  தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதி வேகமாக செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்படுகின்றது.

இதன்போது, விதி முறைகளை மீறியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதுடன்,, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள், அபராதம் மற்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X